search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயண செலவு"

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.1484 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    இதற்காக ரூ.1484 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

    இது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    அதே கால கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் 42 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

    கடந்த 2015-16-ம் ஆண்டில் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். 2016-17-ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார்.

    பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014- 15-ம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    2018-19-ம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை.

    கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்தும் விரிவாக குறிப்பிடப்படவில்லை.

    வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்கு மொத்தம் ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. #PMModi
    ×